தொடர்ந்து சென்றாலும்
சுய நலத்தை
சுயவரமாக்கும் உலகில்
உனக்கு மட்டும் என்ன
தொலைத்து வந்தாலும்
தொடர்கிறாயே!
எதுவும் அற்ற
இந்த பொய்யுலகில்
உண்மை உறவைத்தேடும்
என்னைப் போல்
நீயும் முட்டாள்
என் கண்ணின்
நீர்த் துளி
எண்ணங்களின் வண்ணங்கள்
Sunday, January 15, 2012
Friday, December 30, 2011
பிரிவு
தூது சென்ற மேகம்
என்ன சேதி சொன்னதோ!
வாடைக் காற்று பட்டதும்
வாடி நின்றதோ!
பருவத் தென்றல் காற்று
பாடி வந்ததோ!
பாசம் எனும் கோட்டையில்
அடைந்து கொண்டதோ!
ஊடல் கொண்ட நெஞ்சம்
உறங்க வில்லையோ!
உறக்கம் தெளிந்த பின்னும்
கனவு கலையவில்லையோ!
காத்திருந்த நாட்கள் யுகம்
ஆகிப் போனதோ!
மழையும் போதுமென கார்மேகம்
கலைந்து சென்றதோ!
தென்றல் காற்றில் விலகிச்
செல்லும் மேகம் போலத்தான்
பிரிவு என்றும் தெரியாமல்
பிரிந்து செல்கிறேன்
என்ன சேதி சொன்னதோ!
வாடைக் காற்று பட்டதும்
வாடி நின்றதோ!
பருவத் தென்றல் காற்று
பாடி வந்ததோ!
பாசம் எனும் கோட்டையில்
அடைந்து கொண்டதோ!
ஊடல் கொண்ட நெஞ்சம்
உறங்க வில்லையோ!
உறக்கம் தெளிந்த பின்னும்
கனவு கலையவில்லையோ!
காத்திருந்த நாட்கள் யுகம்
ஆகிப் போனதோ!
மழையும் போதுமென கார்மேகம்
கலைந்து சென்றதோ!
தென்றல் காற்றில் விலகிச்
செல்லும் மேகம் போலத்தான்
பிரிவு என்றும் தெரியாமல்
பிரிந்து செல்கிறேன்
Friday, December 23, 2011
நான், நீ & அக்காள்
வினாடி முள் நான்
நிமிட முள் நீ
பெரிய முள் அக்காள்
கடிகார முட்கள் மட்டும் தான்
ஓர் அச்சு கொண்டு சுழலுமா
பாசம் எனும் ஓர் அச்சு
கொண்டு சுழலுவோம் - நாமும்
வாழ்க்கை எனும் மின்கலம்
முடியும் வரை
நிமிட முள் நீ
பெரிய முள் அக்காள்
கடிகார முட்கள் மட்டும் தான்
ஓர் அச்சு கொண்டு சுழலுமா
பாசம் எனும் ஓர் அச்சு
கொண்டு சுழலுவோம் - நாமும்
வாழ்க்கை எனும் மின்கலம்
முடியும் வரை
Subscribe to:
Posts (Atom)